search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளுவர் தின விடுமுறை நாளில்மது விற்ற 76 பேர் கைது
    X

    திருவள்ளுவர் தின விடுமுறை நாளில்மது விற்ற 76 பேர் கைது

    • 993 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    கோவை,

    திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    நேற்று கோவை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். புறநகர் மாவட்டத்தில் பெரிய நாயக்கன் பாளையம் சப்-டிவிசன் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 269 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பேரூர் சப்-டிவிசன் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கருமத்தம்பட்டி சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 217 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் இருந்து 92 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சப்- டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 91 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புறநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 பேர் கைது செய்யப்பட்டு, 801 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல கோவை மாநகர போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம், காட்டூர், இடையர்பாளையம், இருகூர்,கோவைப்புதூர், நஞ்சுண்டாபுரம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 192 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 76 பேர் கைது செய்யப்பட்டு 993 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×