search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி உடன்குடியில் 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு
    X

    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி உடன்குடியில் 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

    • தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
    • காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    அறக்கட்டளை செயலர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் நடராஜன், செந்தில்குமார், வேல்ராமகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுங்கள். கிராமங்களில் உள்ளவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் நிறுவி மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. அரசு தான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று பேசினார்.

    நலத்திட்ட உதவிகள்

    பின்பு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதன்படி வருகிற 15- ந்தேதி உடன்குடி மேல பஜாரில் நண்பகல் 12 மணி அளவில் 4 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்துடன் உணவு வழங்குதல், மாலை 6 மணிக்கு 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×