search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு அங்கக பண்ணைய பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு அங்கக பண்ணைய பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு அங்கக பண்ணைய பயிற்சி

    • அங்கக வேளாண்மையில் முற்றிலுமாக பூச்சிக்கொல்லி தவிர்க்கப்பட்டு பயிர் சுழற்றி கட்டாயப்படுத்தப்படுகிறது.
    • வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களை எடுத்து கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டா ரம், இரண்டாம்புளிக்காடு கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் குறித்த மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி நாகராஜன். முன்னிலை வகித்தார்.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, "செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்" என்றார்.

    அங்ககப் பண்ணைய சாகுபடியாளர் ஆர்.கமலக்க ண்ணன் பேசுகையில், "விவசாயிகள் அனைவரும் மண்ணின் அங்ககத் தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல், நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல், உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்ககப் பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னை அடையப் பெறுகிறது.

    அங்கக வேளாண்மையை பின்பற்று பவர்கள் உற்பத்தியின் தரத்தையும், அளவையும் அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    அம்முயற்சி பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் நமது சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்" என்றார்.

    அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.சுரேஷ், பேசுகையில் அங்கக வேளாண்மை பாரம்பரிய வேளாண்மையிலிருந்த அடிப்படையிலேயே பல மாற்றங்களை கொண்டது.

    அங்கக வேளாண்மை இயற்கையுடன் இணைந்து செயல்படுவதால் இயற்கை சூழலுக்கு பாதுகாப்பாக அமைகிறது.

    அங்கக வேளாண்மையில் முற்றிலு மாக பூச்சிக்கொல்லி தவிர்க்கப்பட்டு பயிர் சுழற்றி கட்டாயப்படுத்தப்படுகிறது" என்றார்.

    அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆ.தமிழழகன் பேசுகையில், அங்கக வெளியீட்டுப் பொருட்களின் சந்தை நிலவரம், வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களையும் எடுத்துக் கூறினார்.

    ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரத்தினம், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கு.நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×