என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
நாச்சிகுளம் வடிகால் வெட்டும் பணியை அதிகாரி ஆய்வு
- வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடந்த 10-ந்தேதி வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி, நாச்சிகுளம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சேவகர் நாச்சிகுளம் தாஹிர் கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வாய்க்கால் வெட்டும் பணி நீர்வளத்துறையால் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பணிகள் குறித்து திருத்துறைப்பூண்டி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது சமூக சேவகர் நாச்சிகுளம் தாஹிர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story






