என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
    X

    டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    • தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கினால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
    • அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் ரக்சன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் மிகுந்த மன வேதனை அளித்துள்ளது. மதுரவாயல் பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியுள்ளதால் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சென்னை மாநகராட்சியிடம் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கினால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டி ருப்பதால், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×