search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார் திருநகரி யூனியன் அலுவலகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
    X

    தாய்மார்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய காட்சி. அருகில் சண்முகையா எம்.எல்.ஏ., ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் மற்றும் பலர் உள்ளனர்.

    ஆழ்வார் திருநகரி யூனியன் அலுவலகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
    • ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் மட்டும் 98 ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் மொத்தம் 914 குழந்தைகள் கண்டறியப்பட்டு ரூ.18,28,000 மதிப்பீட்டில், ஒரு ஊட்டச்சத்து பெட்டகத்தின் விலை ரூ.2000 வீதம் 914 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதில் ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் மட்டும் 98 ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. விழாவிற்கு ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி வரவேற்று பேசினார்.

    மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊட்டச்சத்து பெட்டகத்தோடு குழந்தைகள் வளர்ச்சி கண்காணிப்பு அட்டவணையும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கி பேசினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. புகாரி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க கனி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், வட்டார மருத்துவர் பார்த்திபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், தென்திருப்பேரை நகர செயலாளர் முத்து வீர பெருமாள், ஆழ்வை நகரச் செயலாளர் கோபிநாத், அழகப்பபுரம் பஞ்சாயத்து பாலமுருகன், குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×