என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாய் 2-வது திருமணம் செய்ததால் நர்சிங் மாணவி தற்கொலை
- ஆன்பி எஸ்.என்.எஸ். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
சரவணம்பட்டி,
குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இரையுமன்துறை சுனாமி காலனியை சேர்ந்தவர் சில்வாடிமை. இவரது மகள் ஆன்பி (வயது 19). இவர் இவர் கோவை கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆன்பி வையாபுரி நகரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்ட அவர் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் உள்ள அறையில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த ஆன்பி விடுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் கதவை தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ஆன்பி வாட்டர் ஹீட்டர் பைப்பில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடந்தார். கோவில்பாளையம் போலீசார் விரைந்து சென்று நர்சிங் மாணவி ஆன்பி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவியின் தாய் விமலாராணி அவரது கணவரை பிரிந்து கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒருவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இதன்காரணமாக மாணவிக்கும், அவரது தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த நர்சிங் மாணவி ஆன்பி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






