என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
  X

  செவிலியர்கள் போராட்டம்

  பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

  சென்னை:

  மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

  இதையடுத்து, செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இந்தப் பேச்சுவார்த்தையில் இந்த நிதியாண்டில் முதல் கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார் என சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார்.

  இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

  Next Story
  ×