என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத 3 செயற்பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
  X

  விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத 3 செயற்பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத 3 செயற்பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
  • காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால்,தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெறவில்லை.

  விழுப்புரம்:

  விழுப்புரம், விராட்டி குப்பம்பாதையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தமிழ்நாடு மின்வாரி யத்தில்விழுப்புரம் மாவட்ட த்தில்விவசாயமின் இணைப்புக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் முழு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து ள்ளது. இதனிடையே, மின் இணைப்பு வழங்காமல் 10.10.2019ம் தேதி வரை காத்திருப்பில் உள்ளவர்கள் பட்டியல் குறித்து தகவல் தெரிவிக்குமாறுதகவல் உரிமைபெறும் சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019ம் தேதி ராேஜந்திரன் விண்ணப்பி த்தார். ஆனால் அதிகாரிகள் கேட்கப்பெற்ற தகவல்களை தரவில்லை.

  இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விவசாயி ராஜேந்திரன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின் பகிர்மான வட்ட செய ற்பொறியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தகவல் வழங்க மறுத்து உள்ளது உறுதி செய்யப்பட்டது. காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால்,தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒருவார காலத்திற்குள் அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம் இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர்கள் நஷ்ட ஈடாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும் தகவல்உ ரிமை பெறும் சட்டபிரிவு 20(1)ன்படி நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம்ஏன் விதிக்கக்கூடாது என்று என்பதற்கான விளக்கத்தை நேரில்ஆஜராகி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கவேண்டும் எனமாநிலதகவல் ஆணையர் தமிழ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  Next Story
  ×