search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது- காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    தஞ்சையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது- காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சு

    • தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.வி.சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    யாராலும் வீழ்த்த முடியாது

    ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பலர் நினைத்தனர். அ.தி.மு.க.வை வழிநடத்தக்கூடிய தகுதியோடு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த முடியாது.

    தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அதனால் தான் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியாகி இருக்கிறார்கள். சாராய சாவுக்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், மாவட்ட இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், துரை.செந்தில், துரைமாணிக்கம், தண்டாயுதபாணி, கல்யாணசுந்தரம், கோவி.இளங்கோ, மலை.முருகேசன், முருகானந்தம், அருணாச்சலம், சாமிவேல், கலியமூர்த்தி, முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் பாலைரவி, 51-வது வட்ட செயலாளர் மனோகர், முன்னாள் விளார்ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், கலைவாணி, காந்திமதி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, அண்ணா தொழிற்சங்க கும்பகோணம்அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் திரு நீலகண்டன் , அதிமுக பிரதிநிதிகள் ஏடி சண்முகசுந்தரம், நடராஜன்,மோகன் ,தங்க கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா பூபதி, மாணவரணி முருகேசன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் துறை கோ. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கோவிதனபால், ஆசைத்தம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவ.ராஜேஷ் கண்ணன், விவசாய அணி துணை செயலாளர் சிவராமன், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, பேரூராட்சி துணை தலைவர் மகேந்திரன் , தெலுங்கன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சு, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் நகரச் செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×