என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் நிலவேம்பு கசாய பவுடர்- நுகர்வோர் அமைப்பு கோரிக்கை
- நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள்செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக நிலவேம்பு கஷாயம் பவுடர் வழங்கவேண்டும், ஊட்டச்சத்துமிக்க கேழ்வரகு மாவு பாக்கெட் தர வேண்டும்,
கோத்தகிரி மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படி மின்கட்டணம் அடங்கிய போர்டு வைக்க வேண்டும், ஊட்டியில் சுற்றிதிரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், நகர்பகுதியில் தொல்லைகள் கொடுக்கும் குரங்குகளை அடர்வனத்தில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆலோசகர் பிரவின், இணைசெயலாளர், வினோபாபாப், முகமதுஇஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் திரசா, லலிதா, விக்டோரியா, சங்கீதா, ரோஸ்லின், விபின்குமார், சுரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் கண்மணி நன்றி கூறினார்.






