என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
  X

  திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
  • பணத்தை வேகமாக திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார்.

  கோவை :

  பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா (வயது 23). சுமை தூக்கும் தொழிலாளி.

  இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண செலவுக்காக அய்யப்பா அருகில் உள்ளவர்களிடம் ரூ.28 ஆயிரம் வாங்கி உள்ளார்.அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

  இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.

  உடனே அவர் அய்ப்பாவிடம் பணத்தை வேகமாக திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார்.இதனால் அய்யப்பா கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.

  அவர் அய்யப்பா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அய்யப்பாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

  .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×