என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயம்
- நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற மல்லிகா வீடு திரும்பவில்லை.
- கருப்பசாமி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நேரு நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). இவரது மனைவி மல்லிகா என்ற மாரியம்மாள் (25). கருப்பசாமிக்கும், மல்லிகாவுக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற மல்லிகா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து 12 நாட்களில் காணாமல் போன புதுப்பெண் மல்லிகாவை தேடி வருகின்றனர்.
Next Story






