search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொம்பன் குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்
    X

    ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.


    கொம்பன் குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்

    • புதிய கட்டிடம் கட்ட 6 ஏக்கர் நிலம் அரசுக்கு அளித்த கொம்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பாராட்டு.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 1 கோடியை 90 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், பள்ளி சுற்றுசுவர் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு கொம்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் வயனபெருமாள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரூபன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முருகேசன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், தெற்கு மாவட்ட தலைவர் லூர்துமணி உள்பட கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். புதிய கட்டிடம் கட்ட 6 ஏக்கர் நிலம் அரசுக்கு அளித்த கொம்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தினார்.

    நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், பிரமுகர்களுக்கு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

    Next Story
    ×