search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இன்று வரை 48 சதவீதம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்  இணைப்பு
    X

    மேலப்பாளையம் மையத்தில் மின் பொறியாளர் குருசாமி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இன்று வரை 48 சதவீதம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு

    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தபட்டு தீவிர மாக நடைபெற்று வருகிறது.
    • மேலும் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தபட்டு தீவிர மாக நடைபெற்று வருகிறது.

    மேலும் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தியாகராஜ நகரில் உள்ள மத்திய அலுவலகத்திலும், தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், பாளை மண்டல பல்துறை சேவை மையத்திலும், மேலப்பாளையம் பிரிவு இரண்டு மையத்திலும், நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் கீழ ரதி வீதியில் அம்மன் சன்னதி அருகிலும், கோடீஸ்வரன் நகர் ரேசன் கடையிலும், பழைய பேட்டை குற்றால ரோட்டில் கல்யாண மண்டபத்திலும் என 7 இடங்களில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்களை மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி இன்று மேலப்பாளையம் பிரிவு- 2 அலுவலகத்திற்கு உட்பட்ட சிறப்பு முகாமை ஆய்வு மேற்கொண்டார்.

    வருகிற 31-ந் தேதிக்குள் வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாய, மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு தொடர்ந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீட்டு மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 10,57,163 கைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 862 விசைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2,090, விவசாய மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 89,480, குடிசை மின் நுகர்வோர்கள் 7,867 என 11,57,465 மின்நுகர்வோரின் எண்ணிக்கை எண்ணிக்கை உள்ளது. இன்று காலை 9 மணி வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும் இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 5,08,804 (சதவீதம் 43.95) ஆகும்.

    நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 2,11,159 ஆகும். இதில் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் இணைய வழி மூலமாகவும் இன்று காலை 9 மணி வரையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 1,00,929 ஆகும். இது 47.8 சதவீதம் ஆகும்.

    வருகிற 31-ந்தேதிக்குள் எஞ்சியுள்ள அனைத்து மின் நுகர்வோர்களையம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவு படுத்த ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் (பொறுப்பு) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவிமின் பொறியாளர்கள் கார்த்திக், ரத்தினவேணி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×