search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓரிரு மாதங்களில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்: 32 அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. காமிரா அமைக்க நடவடிக்கை-மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
    • ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-

    சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு நிதியில் இருந்து சாலை புனரமைப்பு, பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித திறனை ஊக்குவிக்கும் வகையில் வானவில் மன்றம் அமைத்ததற்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. காமிரா

    பொது மக்களின் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பணி நடைபெறும் இடத்தில் இருந்த மணல்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 32 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ச்சி யாக 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்து லட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், அமுதா ஆகிய 3 பேர் தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குடிநீர் பற்றாக்குறை

    தொடர்ந்து கவுன் சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் தொட ர்பாக பேசினர். மேலப்பா ளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா பேசும்போது, தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதி களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இதுதொடர்பாக கவுன்சிலர்களை சந்தித்து பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் பாதாள சாக்கடைக்கு மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

    அப்போது பேசிய கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக சாக்கடை அடைப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றார்.

    28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, சுந்தரர் தெரு கழிவு நீர் அடைப்புகளை உடனடியாக சரி செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் பகுதியில் ரூ.4.60 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது குறித்து விளக்கங்கள் வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் முழங்கால் அளவுக்கு கழிவு நீர் தேங்கி உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

    30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகநாதன் என்ற கணேசன் பேசும்போது, எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம், மாநகராட்சி மெயின் கட்டிடம், சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளது. தைக்கா தெருவில் 5 வருட மாக குடிநீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வினியோ கிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீபுரத்தில் கடந்த 5 வருடமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

    50-வது வார்டு த.ம.மு.க. கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும்போது, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தவிர்க்க மாநகராட்சி புதிய நடைமுறையை கையாண்டதற்கு நன்றி தெரிவித்தார்.

    32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும்போது, எங்கள் வார்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டால் மோட்டார் பழுது சரி செய்ய 4 நாட்கள் ஆகிறது என தெரிவிக்கின்றனர். எனவே மாற்று மோட்டார் வைக்க வேண்டும், புதுப்பேட்டை தெருவில் விரைவில் சாலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா கூறும்போது, மாநகராட்சி விரிவாக்க பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர்

    இதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, ரூ.35 கோடியில் விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, உலகநாதன், கருப்ப சாமி கோட்டையப்பன், பவுல்ராஜ்,கிட்டு என்ற ராம கிருஷ்ணன், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×