என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின் இணைப்பு எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க ஏற்பாடு
  X

  முகாமில் வைக்கப்பட்டுள்ள  பெட்டியில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண்ணை செலுத்தும் நுகர்வோர்.

  மின் இணைப்பு எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க ஏற்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரன்கோவில் கோட்டத்தில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு‌ மின்சார வாரியம் இந்த ஏற்பாடை செய்துள்ளது.
  • வருங்காலத்தில் மின்சாரம் சம்பந்தமாக மின்சார வாரியத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வருவதற்கு இது வழிவகை செய்யும்.

  நெல்லை:

  நெல்லை மின் பகிர்மான கூட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சங்கரன்கோவில் கோட்டத்தில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு‌ மின்சார வாரியம் சார்பில் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அவசரகால முகாமில் சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண்ணை அவசரகால முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்த பரிசு பெட்டியில் செலுத்தினால் குலுக்கல் முறையில் முதல் 10 நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

  மேலும் தங்களது தொலைபேசி எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

  ஏனென்றால் தங்கள் இடம் மாறி இருந்தாலும் சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து இருந்தாலும் இதன் மூலம் வருங்காலத்தில் மின்சாரம் சம்பந்தமாக மின்சார வாரியத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வருவதற்கு இது வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×