search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மத்திய மாவட்ட  தி.மு.க. அலுவலகம் திறப்பு- அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்
    X

    புதிய அலுவலகத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு- அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்

    • கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் குறிச்சி முக்கு அருகே நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த முன்னோடி குமார சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலுவல கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்றார்.

    இதில் மேயர் சரவணன், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், அருள்மணி, போர்வெல் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் அவைத்தலைவர் சுப சீதாராமன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அறங்கா வலர் குழு உறுப்பினர் வெயிலப்பன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், மாநரக பொருளாளர் பூக்கடை அண்ணா துரை, கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், நித்திய பாலையா, மாவட்ட பிரதி நிதி இசக்கி பாண்டி யன், இளைஞரணி ஆறுமுக ராஜா மற்றும் நிர்வாகிகள் வீரபாண்டியன், அலிப் மீரான், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் ஆகியோர் மைதீன்கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×