search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
    X

    விழுப்புரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழுப்புரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி காணவில்லை.
    • கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சாலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். அவரது மகள் லட்சுமி ஸ்ரீ (வயது19) இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சிறப்பு வகுப்புக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த லட்சுமி ஸ்ரீ இன் பெற்றோர் லட்சுமி ஸ்ரீயை உறவினர் வீடு நண்பர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் லட்சுமி ஸ்ரீ கிடைக்கவில்லை. லட்சுமி ஸ்ரீ கல்லூரிக்கு செல்ல வளவனூர் சிறுவந்தாடு மெயின் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் அந்த பஸ் நிறுத்தம் அருகே வெல்டிங் பட்டறை வைத்துள்ள கணபதி என்பவர் லட்சுமி ஸ்ரீ கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் வளவனூர் போலீஸ் நிலையத்தில் குணசேகரன் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமயிலான போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×