search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி அருகே கல் உடைக்கும் தொழிலாளி திடீர் சாவு
    X

    பரமத்தி அருகே கல் உடைக்கும் தொழிலாளி திடீர் சாவு

    • தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
    • சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரஹாசநல்லி மன்னப்பன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ். வாழவந்தியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் ரத்தினம் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார், ரத்தினத்தின் மகள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .தகவலின் அடிப்படையில் ரத்தினத்தின் மகன் விஜயகுமார் மற்றும் அவரது சகோதரி வெண்ணிலா ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர்களது தந்தை ரத்தினம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரும் எஸ். வாழவந்தியில் உள்ள கல்குவாரிக்குச் சென்று அங்கு அவரது தந்தையுடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போது ரத்தினம் காலை 9 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அங்கு வந்த கல்குவாரியின் உரிமையாளரின் தாயார் சாந்தாமணி சத்தம் போடவே ரத்தினத்துடன் வேலை பார்க்கும் ராஜேந்திரன் மற்றும் குழந்தைவேல் ஆகியோரின் உதவியுடன் ரத்தினத்தை கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார் அவரது காரில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், கூறியுள்ளனர்.

    இதுகுறித்து விஜயகுமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பரமத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×