search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் அருகே   புறவழிச்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    சாலையில் தேங்கிய மழை நீரில் சீறிப்பாய்ந்து செல்லும் வாகனம்.

    குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

    • சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் வடிகால் மற்றும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது.
    • தரைப்பாலம் மூழ்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் தினமும் பெய்து வரும் மழையால் அங்குள்ள சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் வடிகால் மற்றும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன், மழைநீர் வெளியேறி வருவதால் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நீருடன் அருகே உள்ள விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீர் , சர்வீஸ் சாலையை தாண்டி புறவழிச்சாலையில் கரைபுரண்டு ஓடுகிறது. வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த விவசாய நிலத்தின் அருகே, மழைநீரில் மூழ்கும் நிலையில் உள்ள தரை பாலத்தின் வழியாக சென்று வந்து கொண்டுள்ளனர்.

    தரைப்பாலம் மூழ்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர், இட உரிமையாளர்கள் பரிசீலித்து விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். செடி, கொடிகள், பிளாஸ்டிக் பொருட்கள், துணி மணிகள் உள்ளிட்டவைகளால் அடைபட்ட வடிகால் அடைப்பை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×