என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா
  X

  கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்.


  நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பர லோக அன்னை ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 10-ம் திருவிழாவான 15-ந் தேதி (திங்கள்கிழமை) புது நன்மை பெறுவோர் இறைமக்கள் சிறப்பு செய்கின்றனர். அதிகாலை 3 மணி க்கு தேரடி திருப்பலி மார்ட்டின் தலைமையில் நடைபெறுகிறது.

  நாசரேத்:

  நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பர லோக அன்னை ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்து டன் தொடங்கியது.

  மறையுரை, நற்கருணை ஆசீர் செய்துங்க நல்லூர் பங்குத்தந்தை ஜாக்சன் தலைமையில் நடை பெற்றது. சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஸ் மறையுரை ஆற்றினார்.

  தைலாபுரம் பங்குத் தந்தை இருதயராஜா திருக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பிரகா சபுரம் சேகர தலைவர் தேவராஜன், பொது நிலையினர் பணியக செயலர் மரியஅரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

  9-ம் திருவிழாவான 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்னையின் உறவு ஒன்றி ப்பு என்ற தலைப்பில் வெளி யூர் வாழ் பங்குமக்கள் சிறப்பு செய்கின்றனர். காலை 8 மணிக்கு செபமாலை, திருப்பலி ஒயிட்ராஜா தலை மையில் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு செப மாலை திருவிழா, மாலை ஆராதனை, வடக்கன்குளம் அமளிவனம் பங்குத்தந்தை ஜெபநாதன் தலைமையில் நடைபெறுகிறது. கள்ளிக்கு ளம் பனிமய அன்னை மேல் நிலைப் பள்ளி முதல்வர் எஸ்.கே.மணி மறையுறை ஆற்றுகிறார்.முடிவில் தேர்ப் பவனி நடக்கிறது.

  10-ம் திருவிழாவான 15-ந் தேதி (திங்கள்கிழமை) புது நன்மை பெறுவோர் இறைமக்கள் சிறப்பு செய்கின்றனர். அதிகாலை 3 மணி க்கு தேரடி திருப்பலி மார்ட்டின் தலைமையில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறை மாவ ட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம் தலைமை யில் நடைபெறுகிறது.

  காலை 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு செபமாலை, நற்கருணைப் பவனி சாத்தான்குளம் மறைவட்ட முத ன்மைகுரு, ரவி பாலன் தலைமையில் நடை பெறுகிறது. பூச்சிக்காடு வசந்தன், திசை யன்விளை டக்ளஸ், இலங்கநாதபுரம் பங்குத்தந்தை ரத்தின ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

  இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு தலைமையில், அருட்சகோதரிகள், பங்கு இறை மக்கள், திருவிழா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  Next Story
  ×