என் மலர்
உள்ளூர் செய்திகள்

அலங்காரத்தில் அம்பாள்.
சங்கரன்கோவில் வாராஹி அம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா
- மகாசக்தி வாராஹி அம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
- பூஜைகளை ஸ்ரீ துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாஸகர் ஸ்ரீ சக்திகணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா, களப்பாகுளத்தில் இருந்து உடப்பன்குளம் இணைப்பு சாலையில் ஜக்கம்மாள் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள மகாசக்தி வாராஹி அம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
விழாவின் நிறைவு நாளில் காலை யாக பூஜை, அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை ஸ்ரீ துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாஸகர் ஸ்ரீ சக்திகணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மஹாசக்தி வாராஹி அம்பாள் வழிபாட்டுக் குழுவை சேர்ந்த மனோன்மணி அம்பாள் உபாஸகர் சக்திவேல், பரமகணேசன், முருகன், பலவேசம், ராமகிருஷ்ணன் ஜெயராமன், சக்திவேல் மற்றும் செந்திலாண்டவர் பாதயாத்திரைக் குழுவினர் செய்திருந்தனர்.
Next Story