என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்
- வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- பட்ஜெட்-2023 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார். கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பிச்சுமணி தொடக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பேராசிரியரும், புவியியல் துறை தலைவருமான சீனிவாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி பயிற்சி மைய தொடக்க கலாசார ஆய்வாளர் மாரிபுஷ்பம், கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன், மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் சேயீ கண்ணன் ஆகியோர் பேசினர். அறிவியல் மாதிரிகள் மற்றும் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதத்துறை தலைவர் ரேவதி நன்றி கூறினார்.
இதேபோல் கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் கல்லூரி இணைந்து பட்ஜெட்-2023 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடத்தின. கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுடனும், கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடனும் இந்த நிகழ்ச்சி நடந்தது. பொருளியல் துறை தலைவரும், துணை முதல்வருமான கலாவதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கமலா அறிமுக உரையாற்றினார். கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் அருணாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். பேராசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார்.






