என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்வெளுத்து வாங்கிய கனமழை
- பரமத்திவேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளசில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து கனமழை கொட்டியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர், கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளசில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து கனமழை கொட்டியது.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






