என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
  X

  முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார்.
  • பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் பழனியாண்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர்.

  அப்போது பழனியாண்டி வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பரமத்தி போலீசாருக்கும், அவரது மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

  தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பழனியாண்டியின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×