என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிவைடரில் மோதிய அரசு பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு
- காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது.
- சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. மேலும் விடுமுறை நாள் என்பதால் நேரம் ஆக ஆக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் போக்குவரத்து போலீசார் நேரில் சென்று பார்த்த போது காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் பஸ்சை மீட்டு மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விபத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.,
Next Story






