என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டுதிருவிழா தொடக்கம்
    X

    மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டுதிருவிழா தொடக்கம்

    • பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத் திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், கலை, நாடகம் ஆகிய 5 தலைப்பு களில் கலைப் பண்பாட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகி றது.
    • மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது.

    நாமக்கல்:

    தமிழக பள்ளி கல்வித் துறை மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத் திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், கலை, நாடகம் ஆகிய 5 தலைப்பு களில் கலைப் பண் பாட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகி றது.2023-2024 -ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ் வரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.

    இப்போட்டிகளில் மாவட் டத்தில் இருந்து 500-க்கும்

    மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி கள் மண்பொம்மை செய்தல், நாட்டுப்புற நடனம் போன்றவை நடைபெறுகிறது. இதில் முதல் 3 இடங்களை பெறுபவர் களுக்கு சான்றிதழ்கள் வழங் கப்படும். மேலும், முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×