search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர். உமா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் டாக்டர். உமா ஆய்வு மேற்கொண்டார்.

    புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி தாசில்தார் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணைய வழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தாசில்தார் பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக நாமக்கல் தாலுகா, கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    நிகச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×