search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி கோபித்து சென்றதால் மகளின் வீட்டுக்கு வைத்த தீயில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
    X

    மனைவி கோபித்து சென்றதால் மகளின் வீட்டுக்கு வைத்த தீயில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

    • செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார்.
    • 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    பரமத்திவேலூர், ஆக.21-

    நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள சேந்தமங்கலம் ஆர்.பி.புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற மணி (60). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி.

    இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். செல்வராஜ் மனைவி சாந்தி, தாய் பெரியம்மாவுடன் சேந்தமங்கலத்தில் வசித்து வந்தார்.

    குடித்துவிட்டு தகராறு

    இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார். இதனால் செல்வராஜின் தொந்தரவு தாங்க முடியாமல் சாந்தி கோபித்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி அருகே பெருக்கம்பாளையத்தில் உள்ள மூத்த மகள் முத்துலட்சுமியின் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

    இதனால் செல்வராஜ் மூத்த மகள் வீட்டிற்கு சென்று மனைவியை அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சாந்தி அங்கிருந்து சேலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    மகள் வீட்டில் மனைவி இல்லாததால் சாந்தி எங்கே இருக்கிறார் எனக்கேட்டு மகள் முத்துலட்சுமியிடம் செல்வராஜ் பிரச்சனை செய்துள்ளார்.

    குடிசைக்கு தீ வைப்பு

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பெருக்கம்பாளையம் வந்த செல்வராஜ் தனது மகளுக்கு சொந்தமான பூட்டி வைக்கப்பட்டிருந்த 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 45 சதவீத தீக்காயத்துடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×