என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (45). இவருக்கும், அதே ஊரே சேர்ந்த குப்புசாமி மகன் பரஞ்சோதி (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பரஞ்சோதியின் அண்ணன் மனைவி கலைமணியிடம், தமிழ்செல்வன் பேசி கொண்டிருந்தாராம். இதைப்பார்த்த பரஞ்சோதி தமிழ்செல்வனை தரக்குறைவாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரஞ்சோதியை கைது செய்தனர்.
இதேபோல பரஞ்சோதியை தமிழ்செல்வன் அவதூறாக பேசி மரக்கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரஞ்சோதி கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர்.
டெல்டா விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பியே சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை மேற்கொண்டனர்.
ஆனால் பருவமழையும் கைவிட்டதால் பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஒக்கூர் ஆசாரிதோப்பு பகுதியை சேர்ந்த மரியக்கண்ணு (வயது50) விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, அதில் வட்டிக்கு பணம் வாங்கி சம்பா சாகுபடி செய்திருந்தார்.
பயிர்கள் முளைத்து வந்த நிலையில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின. இதனால் மனமுடைந்த மரியக்கண்ணு, குத்தகை பணம், வட்டிக்கு வாங்கிய பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்று தெரியாமல் வேதனையில் தவித்து வந்தர்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சரிவர சாப்பிடாமல் இருந்து வந்ததார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த மரியக்கண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் (வயது70) இவர் முதியோர் ஓய்வூதியம் வாங்குவதற்கு வங்கிக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம்:
டெல்டா விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பியே சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை மேற்கொண்டனர். ஆனால் பருவமழையும் கைவிட்டதால் பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஒக்கூர் ஆசாரிதோப்பு பகுதியை சேர்ந்த மரியக்கண்ணு (வயது50) விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, அதில் வட்டிக்கு பணம் வாங்கி சம்பா சாகுபடி செய்து இருந்தார். பயிர்கள் முளைத்து வந்த நிலையில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின. இதனால் மனமுடைந்த மரியக்கண்ணு, குத்தகை பணம், வட்டிக்கு வாங்கிய பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்று தெரியாமல் வேதனையில் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சரிவர சாப்பிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த மரியக்கண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கீழையூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29-ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை கனமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவான வார்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதை தொடர்ந்து சென்னை வானிலை மையம் நாளை (12-ந் தேதி) மாலை வார்தா புயல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மசூதிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.
இதையொட்டி காரைக்கால், கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கபட்டுள்ளதால் நாகை துறைமுகத்தில் இன்று காலை 11 மணிக்கு 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு மின் பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா, மறைஞாயநல்லூரைச் சேர்ந்த ராமசாமி, மகன் மேகநாதன் (வயது 25) எம்.எஸ்.சி பட்டதாரி. தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் ரேவதி (24) எம்.காம் பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் 12.3.15 ஆண்டு திருக்குவளை சார்பதிவாளர் அலுவலகத்தில் மேகநாதனும் ரேவதியும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். பின்பு “அலைபாயுதே” சினிமா படத்தில் வருவது போல் கடந்த 19 மாதமாக அவரவர் வீட்டில் பெற்றோருக்கு பயந்து வாழ்ந்து வந்தனர்.
கடந்த வாரம் மேகநாதனை மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளனர். இதனை அறிந்த ரேவதி தனது காதலனை கைப்பிடிக்க கடந்த 5-ம் தேதி ஆயக்காரன்புலத்திற்கு காரை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு பின்பு தனது தாய் மணிமேகலையை தோப்புத்துறையில் இருந்து ஆயக்காரன்புலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பஸ்சில் இருந்து இறங்கியவுடன் ரேவதி தாயிடம் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அருகில் காரில் தயாராக காத்திருந்த காதலனுடன் சென்று விட்டார். வெகுநேரமாகியும் ரேவதி வராததால் மணிமேகலை தனது கணவர் நாகராஜிற்கு தகவல் தெரிவித்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வாய்மேடு போலீசில் ரேவதியை காணவில்லை என்று தந்தை நாகராஜ் புகார் செய்தார். இதுபற்றி பொறுப்பு இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் காதல் ஜோடி வாய்மேடு போலீசில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே பதிவுத்திருமணம் நடைபெற்று விட்ட சான்றிதழை காண்பித்தனர். அவர்களை போலீசார் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் 18 வயதிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நீதிபதி விசாரணைக்கு பின் வீட்டிற்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து வாழ்ந்து வந்த இருவரும் ஒன்றாக வாழ்வது என முடிவெடுத்தனர். இதையடுத்து ரேவதியை தனது வீட்டிற்கு மேகநாதன் அழைத்து சென்றார்.
மயிலாடுதுறை அருகே உள்ள ஆத்தூர் உத்திரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67). அ.தி.மு.க. தொண்டர்.
இவர் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி டி.வி.யில் ஒளிபரப்பானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்த அ.தி.மு.க. வினர் முனுசாமி வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நாகை மண்டல பொது மேலாளர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நாகை மண்டலம் சார்பில் 12-ந்தேதி (திங்கட்கிழமை) கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, பரக்கலக்கோட்டை, வைத்தீஸ்வரன் கோவில், எட்டுக்குடி ஆகிய ஊர்களுக்கு 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது நாகையில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்களும், பரக் கலக்கோட்டைக்கு 20 சிறப்பு பஸ்களும், வைத்தீஸ்வரன்கோவிலுக்கு 10 சிறப்பு பஸ்களும், எட்டுக்குடிக்கு 10 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாகை, காரைக்கால், பொறையாறு, மயிலாடு துறை, சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வேளாங்கண்ணி உள்ளிட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பஸ்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், குறித்த நேரத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே மூளைக் காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான். நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மேக்கிரி மங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சஞ்சய் (8). இவன் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சைக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. பின்னர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சஞ்சயின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மூளை காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவன் இறந்தான்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் பொறையாறு இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையிலான போலீசார் தில்லையாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 96 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மதுபாட்டில்கள் மற்றும் கடத்திவந்த சீர்காழி கேவரோடையை சேர்ந்த சுரேஷ், வெள்ளக்குளத்தை சேர்ந்த குபேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
வங்க கடலில் புயல் சின்னம் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என செய்தி வெளியானதைதொடர்ந்து நாகை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக நாகையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அதேபோல பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
நாகையை அடுத்த கல்லார் கிராமத்தில் மீனவ பெண்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். அதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (நாகை கிளை) சார்பில் சங்க கட்டிடம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் தலைமையில் சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் அன்பழகன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட கிளை சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல நாகை மற்றும் நாகூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ராமலிங்கம், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவுசாத், நாகூர் நகர தலைவர் அப்துல்காதர், விவசாய அணியை சேர்ந்த குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் மறைவையொட்டி நேற்று வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் எப்போதும் கூட்டமாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை ஆகிய பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இங்குள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் கீழ்வேளூர், தலைஞாயிறு, தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம், மேலப்பிடாகை, கீழையூர், வாய்மேடு, திருமருகல், திட்டச்சேரி, நாகூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.






