என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே மூளை காய்ச்சலுக்கு சிறுவன் பலி
குத்தாலம் அருகே மூளை காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே மூளைக் காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான். நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மேக்கிரி மங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சஞ்சய் (8). இவன் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சைக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. பின்னர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சஞ்சயின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மூளை காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவன் இறந்தான்.
Next Story






