என் மலர்
செய்திகள்

நாகை அருகே பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயி பலி
நாகை அருகே பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மன உளைச்சல் ஏற்பட்டு விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
டெல்டா விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பியே சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை மேற்கொண்டனர்.
ஆனால் பருவமழையும் கைவிட்டதால் பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஒக்கூர் ஆசாரிதோப்பு பகுதியை சேர்ந்த மரியக்கண்ணு (வயது50) விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, அதில் வட்டிக்கு பணம் வாங்கி சம்பா சாகுபடி செய்திருந்தார்.
பயிர்கள் முளைத்து வந்த நிலையில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின. இதனால் மனமுடைந்த மரியக்கண்ணு, குத்தகை பணம், வட்டிக்கு வாங்கிய பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்று தெரியாமல் வேதனையில் தவித்து வந்தர்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சரிவர சாப்பிடாமல் இருந்து வந்ததார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த மரியக்கண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story