என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
சீர்காழி குமரகோவில் மேல வீதியை சேர்ந்தவர் பட்டு என்கிற பத்மநாபன் (42). இவர் சீர்காழி ஈஸ்வரி தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று டாஸ்மாக் ஊழியர் மணிகண்டனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்கு பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தார். சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்குமுக தெருவை சேர்ந்தவர் தர்மா என்கிற பிரபாகரன் (35). இவர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று பார் ஊழியர் முத்துச்சாமியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி பிரபாகரனை கைது செய்தார். கைதான பிரபாரகன், பத்மநாபன் ஆகியோர் மீது வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் வீரமணி (28). இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் கபிலனை அழைத்து கொண்டு வேம்பதேவன்காடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வேம்ப தேவன்காடு பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் லெட்சுமணன் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது. இதில் வீரமணி பலத்த காயமடைந்தார்.
இவரை உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி செய்து திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் குத்தாலம் ஐடியல் ஐகான்ஸ் சமூக நல அமைப்பின் சார்பில் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் குத்தாலம் கடை வீதியில் அறவழி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஐடியல் ஐகான்ஸ் அமைப்பின் தலைவர் பிரித்விராஜ் தலைமை வகித்தார். இயற்கை விவசாய ஆர்வலர் சம்பந்தம் முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தில் ஐடியல் ஐகான்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், ஜேசிஐ இளைஞர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பிற சமூக நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இப்போராட்டத்தினை ஐடியல் ஐகான்ஸ் சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
மயிலாடுதுறை:
ஜல்லிகட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.கள் குத்தாலம் கல்யாணம், ஜெகவீரப்பாண்டியன், பன்னீர்செல்வம், குத்தாலம் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள ஹீரா நல்லூரை சேர்ந்தவர் கண்ணன் (28). இவர் தனக்கு சொந்தமான வேனை வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தில்லைவிடன் பகுதியை சேர்ந்த பிறைசூடன் (28) உருட்டுக்கட்டையால் வேனின் கண்ணாடியை உடைத்தார். இதனை தட்டிக் கேட்ட கண்ணன் மற்றும் அவரது உறவினர் கார்த்திகேயன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிறைசூடனை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் லாரி புக்கிங் அலுவலகத்தில் அகஸ்தியன்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆசைத்தம்பி (28) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 11-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு சென்ற போது நாகை மெயின்ரோட்டில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஆசைத்தம்பி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்டையூரில் 30 ஆண்டுகளாக காணும் பொங்கலை முன்னிட்டு குதிரைவண்டி, மாட்டு வண்டிகள் பங்கேற்கும் ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று பொறையார் பெரிய பள்ளிவாசல் அருகே குதிரை, மாடுகள், வண்டிகளுடன் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. தலைமையில் பொறையார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போட்டிக்கு கொண்டுவரப்பட்ட 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காரைக்கால் திருபட்டிணத்தை சேர்ந்த சரவணன், பொறையாரை சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பானது. இதற்கு முன்னர் பொறையார் டி.பி.எம்.எல். கல்லூரி மாணவ, மாணவிகள் ஜல்லிகட்டும், ரேக்ளா போட்டி நடத்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்ததது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சித்திரவேலு (47). மீனவர். சம்பவத்தன்று கட்டு மரத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து அவரது மகன் ஜெகதீஷ் வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு அரக்கரை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகள் தங்கம்மாள் மாற்றுத்திறனாளி.
இவர் கடந்த 11-ந்தேதி இரவு உறவினர் வீட்டு வாசலில் பேசி கொண்டிருந்த போது அவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற போது அங்கு ஒருவர் பதுங்கி இருந்தார். அவர் தேத்தாகுடி வடக்கு சுப்பிரமணியன் மகன் ராஜகுமார் (38) என்பது தெரியவந்தது.
இது குறித்து தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வீட்டுக்கு தீ வைத்த ராஜகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள செண்பகச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி மாலா (35). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர், முரளி, கண்ணன், கலிய மூர்த்தி, இளையராஜா, ரகுவரன் ஆகியோர் மாலாவை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
மேலும் மானபங்கம் படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. மாலாவின் மகன் ஆடு திருடியதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக அவரை தேடி வந்த போது அவர் வீட்டில் இல்லாததால் மாலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், முரளியை கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளிடம் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பெயர், முகவரிகளை தெரிவித்து உறுப்பினர் படிவங்களை பெற்று செல்கிறார்கள்.
தீபா பேரவை தொடர்பான பிளக்ஸ் போர்டுகள் நகரில் பல பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்களால் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல பகுதிகளில் தீபா பேரவையினர் பேனர்கள வைத்திருந்தனர். அதனை சிலர் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த தீபா பேரவையினர் மயிலாடுதுறை பகுதி நிர்வாகி தட்சிணா மூர்த்தி தலைமையில் மயிலாடுதுறை - கல்லணை சாலையில் மாப்படுகை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம்மாள் (60). இவர் தனது மருமகள் நாகலெட்சுமியுடன் கூலி வேலைக்கு செல்வதற்காக பாலடி வீரன் கோவிலடியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் தங்கம்மாள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். நாகலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.






