என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
    X

    குத்தாலம் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

    குத்தாலம் அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், முரளியை கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள செண்பகச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி மாலா (35). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர், முரளி, கண்ணன், கலிய மூர்த்தி, இளையராஜா, ரகுவரன் ஆகியோர் மாலாவை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.

    மேலும் மானபங்கம் படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. மாலாவின் மகன் ஆடு திருடியதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக அவரை தேடி வந்த போது அவர் வீட்டில் இல்லாததால் மாலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், முரளியை கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×