என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே வேன் கண்ணாடி உடைப்பு: வாலிபர் கைது
சீர்காழியில் வேன் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள ஹீரா நல்லூரை சேர்ந்தவர் கண்ணன் (28). இவர் தனக்கு சொந்தமான வேனை வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தில்லைவிடன் பகுதியை சேர்ந்த பிறைசூடன் (28) உருட்டுக்கட்டையால் வேனின் கண்ணாடியை உடைத்தார். இதனை தட்டிக் கேட்ட கண்ணன் மற்றும் அவரது உறவினர் கார்த்திகேயன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிறைசூடனை கைது செய்தனர்.
Next Story