என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலத்தில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
    X

    குத்தாலத்தில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

    தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் குத்தாலம் கடை வீதியில் அறவழி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் ஐடியல் ஐகான்ஸ் சமூக நல அமைப்பின் சார்பில் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் குத்தாலம் கடை வீதியில் அறவழி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஐடியல் ஐகான்ஸ் அமைப்பின் தலைவர் பிரித்விராஜ் தலைமை வகித்தார். இயற்கை விவசாய ஆர்வலர் சம்பந்தம் முன்னிலை வகித்தார்.

    இப்போராட்டத்தில் ஐடியல் ஐகான்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், ஜேசிஐ இளைஞர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பிற சமூக நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இப்போராட்டத்தினை ஐடியல் ஐகான்ஸ் சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
    Next Story
    ×