என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூரில் மாயமான  மனநலம் பாதித்த வாலிபர் சேலத்தில் மீட்பு  பெற்றோரிடம் ஒப்படைப்பு
  X

  திருப்பூரில் மாயமான மனநலம் பாதித்த வாலிபர் சேலத்தில் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார்.
  • சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

  சேலம்:

  திருப்பூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரது மகன் அர்ஜூன் பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார். இது குறித்து அர்ஜூனின் பெற்றோர் திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், நேற்று இதுகுறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த அன்னதானப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன், சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அர்ஜூன் பிரகாஷின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து பிரகாஷை மீட்டுச் சென்றனர்.

  Next Story
  ×