search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே சமத்துவ விருந்து வழங்கிய இஸ்லாமியர்கள் - ஜாதி, மத பேதமின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
    X

    கந்தூரி விழாவை தொடங்கி வைத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்தபடம்.

    விளாத்திகுளம் அருகே சமத்துவ விருந்து வழங்கிய இஸ்லாமியர்கள் - ஜாதி, மத பேதமின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

    • இஸ்லாமிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக “சமத்துவ விருந்து” வழங்கி அசத்தியுள்ளனர்.
    • விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப்பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள இஸ்லா மிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக "சமத்துவ விருந்து" வழங்கி அசத்தி யுள்ளனர். இந்த சமத்துவ விருந்தில் அரியநாயகிபுரம் கிராம மக்கள் மட்டுமில்லா மல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டு சமத்துவ விருந்தில் வழங்கப்பட்ட சுவையான அசைவ விருந்தை ஒன்றாக கூடி அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப் பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை சுவைத்து அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

    மேலும், அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை இக்கிராமத்தில் 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் இக்கிராமத்தில் இருந்து வெளியூர், வெளிநாடு என பணி மற்றும் தொழில் ரீதியாக சென்றிருந்தவர்கள் கூட தவறாமல் கலந்து கொண்டு சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்க படை யெடுத்து வந்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் விளாத்தி குளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அன்வர் அலி, அரசு பதிவு பெற்ற பொறியாளர் முகமது இக்பால், அரியநாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் (சென் னை) தலைவர் நாகூர் பிச்சை, அரிய நாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் தலைவா் முகமது இப்ராஹிம், அரிய நாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் மாாியம்மாள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் வரிசை முகமது, ஜாகிர் உசேன், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செய லாளர்கள் சின்னமாரிமுத்து, ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு, நகர செயலாளா் வேலுச் சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், முத்தையா புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, சமூக வலைதள பொறு ப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×