என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே ஆற்றில் குளித்த பெண்ணிடம் சில்மிஷம்-தொழிலாளி கைது
- மகாராஜன் நேற்று அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
- குளிக்க வந்த பெண்ணிடம் மகாராஜன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை:
பாளை திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 46). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆற்றில் குளிக்க வந்தார். அந்த பெண்ணிடம் மகாராஜன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
Next Story






