search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என வலியுறுத்தினேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என வலியுறுத்தினேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி

    • பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

    தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிராக நடைபெற்ற கூட்டமாக இதைக் கருத வேண்டாம்.

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன்.

    பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்தியாவின் பன்முகத்தன்மை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும்.

    மீண்டும் பா.ஜ.க. வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

    மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×