என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலசுப்பிரமணியன்
பாளை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான முதியவர் பிணமாக மீட்பு
- பாளை தெற்கு உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன்.
- நேற்று மருத்துவமனையில் உள்ள மின்சார அறை அருகே உள்ள தரை கீழ்தளத்தில் துர்நாற்றம் வீசி உள்ளது.
நெல்லை:
பாளை தெற்கு உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 82).
மாயம்
இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த அக்டோபர் 15-ந் தேதி பாளை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக உறவி னர்கள் சேர்த்துள்ளனர்.
மறுநாள் பாலசுப்பி ரமணியன் மருத்துவமனை வார்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலசுப்பிர மணியனை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் உள்ள மின்சார அறை அருகே உள்ள தரை கீழ்தளத்தில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது மாயமான பால சுப்பிர மணியன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பால சுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






