என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜீவானந்தம் பெயரில் விருது வழங்க நடவடிக்கை- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- கலை, இலக்கிய முன்னெடுப்புகளில் பேராசான் ஜீவானந்தம் பெரிதும் பங்காற்றியுள்ளார்.
- தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களின் பெயரில் தொடர்ந்து விருதுகள் வழங்கி வருகிறது.
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், இலக்கியப் பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
பேராசான் ஜீவானந்தம் பெருமை அனைவரும் அறிந்ததே, "ஏறினால் ரெயில் இறங்கினால் ஜெயில்" என்ற வகையில் தன்னுடைய போராட்டத்தை நடத்தியவர். கலை, இலக்கிய முன்னெடுப்புகளில் பெரிதும் பங்காற்றியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களின் பெயரில் தொடர்ந்து விருதுகள் வழங்கி வருகிறது. 76 விருதுகள் தமிழ் வளர்ச்சி துறை மூலமும், அகர முதலீட்டு திட்டத்தின் மூலம் 144 விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.