search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியைவிட அதிகமாக மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்
    X

    அ.தி.மு.க. ஆட்சியைவிட அதிகமாக மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

    • ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • மேட்டூர் தொகுதியில் குறைபாடுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் கீழ்வேளூர் தொகுதி, தெற்கு தெருவில், மின்கம்பத்துடன் கூடிய தெருவிளக்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும், விவசாயிகளுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சதாசிவம் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்பிற்கான மின் இணைப்புகள் அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க. ஆட்சியில் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த 2016-21ம் ஆண்டுகளில் 51 ஆயிரத்து 729 தெருவிளக்கு மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், 2021-23ம் ஆண்டு பிப்ரவரி வரை 48 ஆயிரத்து 779 மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், தெருவிளக்கு அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு ஊரக உள்ளாட்சி மூலம் நிதி ஒதுக்கப்படும் நிலையில் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    மேட்டூர் தொகுதியில் குறைபாடுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    Next Story
    ×