என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி எல்.முருகன் அந்தமான் பயணம்
- அந்தமான் வடக்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் உள்ள மாயாபந்தரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்கிறார்.
- மீனவர் சமுதாயத்தினருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உரையாற்றுகிறார்.
சென்னை:
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு அந்தமானில் சுற்றுப்பயணம் செய்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை அந்தமான் புறப்பட்டு செல்லும் அவர் போர்ட் ப்ளேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
நாளை (சனிக்கிழமை) தெற்கு அந்தமான் பகுதியில் உள்ள துர்காபூரில் மீனவ சமுதாயத்தினருடன் அவர் உரையாற்றுகிறார். பின்னர் ராதா கோவிந்த் கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும், திக்லிபூர் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, அந்தமான் வடக்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் உள்ள மாயாபந்தரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். மாயாபந்தர் பஜாரில் மாவட்ட பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் மீனவர் சமுதாயத்தினருடனும் அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க உள்ளார்.
போர்ட் ப்ளேர் தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






