search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழப்பு:  தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தகவல்
    X

    மாண்டஸ் புயலால் சேதம் அடைந்த வீடுகள்

    மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழப்பு: தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தகவல்

    • புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை 3 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன,மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.

    புயலால் 40 இயந்திர படகுகள்,160 வலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.694 மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 216 இடங்களில் நிவாரண மையம் அமைக்கப்பட்டிருந்தன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×