search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையில் பயிர்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள்-வேளாண் இணை இயக்குனர் தகவல்
    X

    தொடர் மழையில் பயிர்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள்-வேளாண் இணை இயக்குனர் தகவல்

    • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல் வயல்களை மழைநீர் தேங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.
    • நோய் தாக்குதல்களை தடுக்க 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் முருகா னந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல் வயல்களை மழைநீர் தேங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.

    வயலில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வடிகட்ட வேண்டும். இளமஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிர்களுக்கு இலைவழி உரமிட வேண்டும். 1 கிலோ சிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை மூலம் தெளிக்க வேண்டும்.

    நோய் தாக்குதல்களை தடுக்க 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை மூலம் தெளிக்க வேண்டும்.

    நோய் தாக்குதல்களை தடுக்க 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

    மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை காப்பாற்ற 4 கிலோ டி.ஏ.பி.உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டிய கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    பூச்சி தாக்குல் அதிகமாக காணப்படும் பொழுது வேம்பு சார்ந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் விவசாயிகள் தங்கள் நெல், உளுந்து, பாசிப்பயிறு மற்றும் மக்காச்சோள பயிர்களை முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்தால் எதிர்பாராத இழப்பில் இருந்து விவசாயி கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×