என் மலர்
உள்ளூர் செய்திகள்

இனாம்மணியாச்சி சந்திப்பில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கோவில்பட்டியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
- ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
- இதுபோல் இனாம்மணியாச்சி விலக்கு அருகே ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தமிழக அரசுக்கும், சட்டப்பேரவையின் செயல்பாடுகளுக்கும், ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுகள் தான் என்றும், பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார். எனவே ஆளுநர் ஆர்.என். ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலர் பால்ராஜ், நகர இளைஞரணி செயலர் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலர் சரோஜா, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் தெய்வேந்திரன், சக்திவேல், தி.மு.க. சார்பில் சிவா, காளியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலர் கதிரேசன், வக்கீல் அணி மாவட்ட செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், காங்கிரஸ் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, பொருளாளர் காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் இனாம்மணி யாச்சி விலக்கு அருகே ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி செயலாளரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலர்கள் சரவணன் (மத்திய பகுதி), கேசவ நாராயணன்(மேற்கு), மாரிச்சாமி (கிழக்கு), ராஜ்குமார் (புதூர்), ராஜசேகர்(விளாத்திகுளம்), மாநில இலக்கிய அணி மகாராஜன், தூத்துக்குடி மத்திய பகுதி முருக பூபதி, முன்னாள் யூனியன் சேர்மன் கணேசன், வனராஜன், முத்தால், ராஜேஸ்வரி, மாரிமுத்து, சீனிவாசன், முத்துச்செல்வன், வெங்கடேசன், செண்பக ராஜ், நாகராஜ், முத்து பாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினர் திரளா னோர் கலந்து கொண்டனர்.
இந்த கையெழுத்து இயக்கம் ஒரு மாதம் நடைபெறும் என்றும், பின்னர் கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழங்குவார் எனவும் ம.திமு.க.வினர் தெரிவித்தனர்.






