search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் ஆய்வு
    X

    புதிய தார்சாலை அமைக்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் ஆய்வு

    • தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய துறைமுகம் வரை செல்லும் தமிழ் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள மணல் திட்டுகள் மற்றும் கற்களை அகற்றும் பணியினை மாநகர கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலையில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முன்னதாக மாலையில் தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் கமிஷனர், தலைமை சுகாதார அதிகாரி, சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள்,தூய்மைக் காவலர்கள், கண்கானிப்பாளர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போல்பேட்டை பிரதான சாலையினை அகலப்படுத்தும் பணி நிறைவுற்றுள்ளது. அதனை அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு வரை நீட்டித்து முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது நடைபெற்று வருகின்ற சாலை அகலப்படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகளினால் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மாநகரின் 60 வார்டுகளிலும் முழுமையான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைப்பிடிக்கும் விதமாக எட்டையாபுரம் போல்பேட்டை 60-வது அடி சாலைப்பகுதியில் மாசு தூசி படியாத வகையில் கால்வாய் ஒட்டிய பகுதிகளில் குறிப்பிட்ட அளவிற்கு புதிதாக தார்சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு அமெரிக்கன் மருத்துவமனை 4 வழித்தட முகப்பு வரை பதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை கொண்டு வரும் வகையில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணியை 60 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் செய்யாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எல்லா பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன்,முத்துவேல் முன்னாள் கவுன்சிலர் ரவிந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜாஸ்பர், வட்டச்செயலாளர் முனியசாமி, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×