search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு
    X

    தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் நடைபெற்று வரும் புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்த காட்சி. 

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு

    • தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நூற்றுக்கணக்கான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • புதிய சாலைப் பணிகளையும், பழைய பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நூற்றுக்கணக்கான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டு திட்டங்கள் விரைவாக நடைபெற அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.

    இந்நிலையில் பிரையன்ட் நகர், மாசிலா மணிபுரம், செல்சீனி காலனி, ஸ்டேட் பேங்க் காலனியில் நடை பெற்று வரும் புதிய சாலைப் பணிகளையும், புதுபிக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் பழைய பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து புதிய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்று வரும் புதிய கழிப்பறை மற்றும் அதன் அருகே உள்ள கலைஞர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் நடைபெற்று வரும் சுத்தப்படுத்தும் பணிகளையும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மேயருடன் துறை சார்ந்த அதி காரிகள் அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×